Saturday, October 29, 2011

Aadhar idenity card now issued at Anna Road Post Office, Chennai


இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

27.10.2011 முதல்அண்ணாசாலை தலமை தபால் நிலையத்தில் மட்டும் உங்கள் அப்ளிகேஷனைபுர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 ந.ாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் ஒருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இனைக்கபடும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்க உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது.

கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம். -http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_download/enrolmentform.pdf

கார்டு பெற தேவையான டாகுமென்ட்ஸ் இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம். -http://uidai.gov.in/images/FrontPageUpdates/proof_of_identity_documents_supported.pdf

No comments:

Post a Comment